இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா செல்லவுள்ளார்.
பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
இதற்காக அவர் எதிர்வரும் 17 அல்லது 18 ஆம் திகதி பிரித்தானியா செல்லவுள்ளார்.
எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்
Be First to Comment