உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தற்போது அதன் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தி அதன் உறுப்பினர்களுக்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான சூழலை தயார்படுத்த வேண்டும்.
இதன்படி, நீடிக்கப்பட்டுள்ள கால அவகாசம் நிறைவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான வர்த்தமானி!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment