விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நடிகை தமிதா அபேரத்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (12) உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
Be First to Comment