14 September 2022
கிளிநொச்சியில் நன்னீர் மீன் கருவாட்டு உற்பத்தியை தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் பெண்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற சங்க பிரதிநிதிகளின் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக கருவாடு பதனிடும் இயந்திரத்தை கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இன்று வழங்கி வைத்தார் .
இரணைமடுவில் கடல்தொழில் அமைச்சின் கிழ் உள்ள இலங்கை தேசிய நீரியல் வழங்கல் அபிவிருத்தி அதிகாரசபையின் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேற்படி சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலேயே அமைச்சர் அவர்களினால் சுமார்
ஒரு லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் பெறுமதியான இயந்திரத்தை வழங்கி வைத்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment