யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள திவிஸ்னா வர்த்தகநிலையத்தில் நள்ளிரவு ( கொள்ளை இடம்பெற்றுள்ளது.
குறித்த கொள்ளை சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள திவிஸ்னா வர்த்தக நிலையமொன்றில் இன்று நள்ளிரவு (14) இனந்தெரியாத கொள்ளை கும்பல் கடை முன் வாயில் வழியாக பூட்டை உடைத்து மர்மமான முறையில் கடைக்குள் புகுந்து ஐந்து இலட்சம் பெறுமதியான அரிசி மூட்டை,பால்மா பெட்டி வகைகள்,கோதுமை மா, எண்ணெய், பிஸ்கட் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது .
மேலும் குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் ராசு உதயராசா கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதை
அடுத்து கோப்பாய் பொலிஸார் கொள்ளை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
Be First to Comment