தாமரை கோபுரம் நாளை முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில், அதனை பார்வையிடுவதற்கான போலி அனுமதி சீட்டு மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படுவது தொடர்பில் சீன தூதரகம் விளக்கமொன்றை வழங்கியுள்ளது.
சீன தூதரகம் விட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக விநியோகிக்கப்பட்டு வரும் குறித்த அனுமதி பத்திரம் போலியானது என்பதோடு, அதனை விநியோகித்து தாமரை கோபுரத்திற்கு இலவச விளம்பரத்தினை ஏற்படுத்தி கொடுத்த தரப்பிற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் சீன தூதரகம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நாளை முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை சென்று தரை தளத்தில் அனுமதி சீீட்டினை பெற்றுக்கொண்டு பார்த்து மகிழுமாறும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வளர்தோருக்கு 500 ரூபா முதல் 2000 ரூபா வரையிலும் 10 வயதிற்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா முதல் 500 ரூபா
வரையிலும் அனுமதி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப்பணிகள், கடந்த பெப்பிரவரி 28 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக சீன நிறுவனம் 88.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதுடன் மிகுதியை இலங்கை அரசாங்கம் கொடுத்துள்ளது.
தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அண்மையில் அறிவித்ததுடன், 2024ஆம் ஆண்டுக்குள் கடன் தவணைக் கொடுப்பனவுகள் நிறைவடைய உள்ளதாகவும், ஏற்கனவே 66.3936 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
Be First to Comment