ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு சத்தான சோற்றுணவை வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன பாடசாலை மாணவர்களின் போஷாக்கிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால், ஆரம்பக் கல்வி பயிலும் பிள்ளைகளின் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் உணவு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சு கல்வி அமைச்சக மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் தேசிய உணவு அபிவிருத்தி சபை ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.
அதன்படி, பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க, இந்த மதிய உணவில் போலிக் அமிலம், இரும்புச்சத்து, விற்றமின்கள் அடங்கிய சமச்சீர் சோற்றுணவு வழங்கப்பட உள்ளது.
நாளொன்றுக்கு உணவுக்குத் தேவையான அரிசியின் அளவு 82 மெற்றிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த அளவு அரிசியை சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக வழங்குவதற்கும் விவசாய அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
Be First to Comment