ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவ விட மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி தலைவியுமான ஹிருணிகாபிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
ரணிலின் வெளியேற்றம் விரைவில் நிகழும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விட அது மிகவும் பயமாக இருக்கும். அவர் உடனடியாக நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று பிரேமச்சந்திர செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எழுச்சி மீண்டும் ஆரம்பிக்கும் நிலை உள்ளது. முக்கிய தொழிலதிபர்களின் வீடுகள் ஆதரவற்ற மக்களால் எரிக்கப்படும் மற்றும் பணக்காரர்களுக்கு சொந்தமான அனைத்து செல்வங்களும் ஏழைகளால் பறிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
பணக்காரர்களுக்கு சொந்தமான சொத்து அபகரிப்பு
சில நாட்களுக்கு முன்னர் பத்தரமுல்லையில் இடம்பெற்றமை போன்று பணக்காரர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரித்தல் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று அவர் கூறினார்.
பிரேமலால் ஜயசேகரவை இராஜாங்க அமைச்சராக நியமிக்கும் தீர்மானத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்த ஹருனிக்கா பிரேமச்சந்திர, இந்த நடவடிக்கையை ஐக்கிய தேசியக்கட்சியினர் எவ்வாறு வரவேற்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளரைக் கொன்றமைக்காகவே ஜெயசேகர குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். எனினும் அவர் அமைச்சரானமையை ஐக்கிய தேசியக்கட்சியினர் எப்படி பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் விக்ரமசிங்க பங்கேற்பதால் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
Be First to Comment