யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். அங்குள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் இயற்கை உபாதைகளுக்கு உள்ளாவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை
இதேவேளை இரவு வேளைகளில் பேருந்து நிலையத்தில் கூடும் சிலர் அங்கே மது அருந்துதல் , போதைப்பொருள் பாவனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக வெற்று பியர் ரின்கள் , மதுப்போத்தல்கள் அவ்விடத்தில் காணப்படுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளினால் இரவு வேளைகளில் பேருந்துக்களில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கும் பெண்கள் உள்ளிட்டவர்கள் அச்சத்துடனையே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Be First to Comment