Press "Enter" to skip to content

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த தொழில் தேடும் அல்லது சுயதொழில் ஆரம்பிக்கும் விரும்பம் உள்ள இளையோருக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் அல்லது சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்க முயற்சிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு யாழ்.மாவட்டச் செயலர் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

யாழ்.மாவட்டச் செயலகமானது மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் கொண்டிருப்பவர்களைப் பதிவு செய்யவிருக்கின்றது.

இதன் ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாணம், நல்லுார் , கோப்பாய் , சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள அனைத்து கிராமசேவையாளர் பிரிவுகளுடாகவும் இப்பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்கள் கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

பெற்றுக்கொள்ளும் விண்ணப்பப் படிவங்களை பூரணப்படுத்தி எதிர்வரும் 20 ஆம் செவ்வாய்க்கிழமை அன்று அல்லது அதற்கு முன்பதாக கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கமுடியும்.

பதிவுகள் தொடர்பான மேலதிக விபரங்கள் , வழிகாட்டுதல்கள் தேவைப்படுமிடத்து 0212219359 என்ற தொலைபேசியூடாக பெற்றுக்கொள்ளலாம்.

எனவே தொழில் வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *