Press "Enter" to skip to content

செயலிழந்து கிடக்கும் யாழ்.மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு! பிரதி முதல்வரின் கதையும் காலாவதி..

யாழ்.மாநகரசபையின் இரு தீயணைப்பு வாகனங்களும் செயலிழந்துள்ள நிலையில் மாற்று ஒழுங்குகள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் மாற்று ஒழுங்குகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான ஒரு தீயணைப்பு வாகனம் 2020 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான நிலையில் இதுவரை திருத்தம் நடவடிக்கைகளை ஏதும் இடம்பெறவில்லை.

மற்றய தீயணைப்பு வாகனமும் பாழுதடைந்த நிலையில் யாழ்.மாநகர வளாகத்துக்குள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் யாழ்.மாநகர பதில் முதல்வர் தீயணைப்பு வாகனத்தில் அவசர திருத்த வேலைகள் இருப்பதன் காரணமாக ஒரு வாரத்துக்கு சேவைகள் இடம்பெறாது என அறிவித்திருந்தார்.

பதில் முதல்வருடைய மேற்படி அறிவிப்பும் கடந்த வாரத்துடன் நிறைவடைந்த நிலையில் மாநகர தீயணைப்பு வாகனம் செயலிழந்த நிலையில் தொடர்ந்தும் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் யாழ்.மாநகர தீயணைப்பு பிரிவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது தீயணைப்பு வாகனம் செயலிழந்ததை உறுதிப்படுத்தியதுடன்

மாற்று ஒழுங்கு தொடர்பில் தமக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *