Press "Enter" to skip to content

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்

இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்யும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவன் வேலை செய்யும் ஒரு மணித்தியாலத்திற்கு ஊதியமாக 350 ரூபா செலுத்தப்படவுள்ளது.

பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவு தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கும், மாணவர்களுக்கு இந்த தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் எம். டி. லமாவங்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், இந்த புதிய வேலைத்திட்டம் குறித்து மாணவர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை சுமார் 170 மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *