Press "Enter" to skip to content

காலபோக பயிர்செய்கை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள தகவல்

இவ்வாண்டு காலபோக பயிர்செய்கையின் போது, வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் தலையிடக்கூடாது என கண்டிப்பான உத்தரவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்திலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய கூட்டத்தில் வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

டக்ளஸ் தேவானந்தாவின் விசேட உத்தரவு

காலபோக பயிர்செய்கை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள தகவல் (VIDEO) | Information Published By Douglas

நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட பகுதிகளை அடையாளப்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதை தடுப்பதும், அவர்களை தாக்குவதுமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் நான் இவ்வாறான கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்கின்றேன். இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளேன்.

 

 

இன்றைய கூட்டத்தில் காலபோக பயிர்செய்கையின் போது, வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் தலையிடக்கூடாது என அறிவிப்பை விடுப்பேன் என அமைச்சரிடமும் கூறியிருந்தேன்.

காலபோக பயிர்செய்கை

காலபோக பயிர்செய்கை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள தகவல் (VIDEO) | Information Published By Douglas

எனவே கடல் வேளாண்மை, நீர் வேளாண்மை, விவசாயம் ஆகிய விடயங்களில் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் தலையிட வேண்டாம். இவ்வருடம் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது என அனைவருக்கும் தெரியும்.

இதன் காரணமாக இந்த வருடம்  காலபோக பயிர்செய்கையில் எவ்வித தலையீடுகளையும் செலுத்த வேண்டாம் எனவும், விவசாய நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *