Press "Enter" to skip to content

கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த கூட்டமைப்பு

வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் இன்றைய தினம் (16) அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகில் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறுகின்றது.

கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த கூட்டமைப்பு (Photos) | Fray In Support Of The Prisoners

 

அரசியல்வாதிகளும் பங்கேற்பு

போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த கூட்டமைப்பு (Photos) | Fray In Support Of The Prisoners

இதன்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த கூட்டமைப்பு (Photos) | Fray In Support Of The Prisoners கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த கூட்டமைப்பு (Photos) | Fray In Support Of The Prisoners

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *