நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட தாமரை கோபுரத்தில் பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்ததன் மூலம் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) பிரசாத் சமரசிங்க, மொத்தம் 2,612 பேர் நேற்று தாமரை கோபுரத்தை பார்வையிட்டதாகவும் அவர்களில் 21 வெளிநாட்டவர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் தாமரை கோபுரம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
Be First to Comment