இலங்கைக்கு மேலதிக அவசர உதவியாக மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.
ஆனால், இந்தப் பணத்தை நேரடியாக அரசாங்கத்திடம் வழங்காமல் உலக உணவுத் திட்டம் (WFP), சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்கள் (IFRC) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம் (UNICEF) மூலம் வழங்கப்படவுள்ளது.
முன்னதாக மே 20 ஆம் திகதி ஜப்பான் மனிதாபிமான உதவியாக 3 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியிருந்ததுடன், இதுவரையில் ஜப்பான் இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 6.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது
Be First to Comment