உக்ரேனின் காகிவ் பகுதியில் ரஷ்யப் படைகளால் நடத்தப்படும் சித்திரவதைக் முகாமில் இருந்து 07 இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் சித்திரவதை முகாமில் ரஷ்ய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்த மாணவர்கள் தொடர்பில் துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, துருக்கி தூதரக அதிகாரிகள் உக்ரைன் அதிகாரிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாணவர்கள் உக்ரைனில் உள்ள குபியான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்று வந்தனர்.
ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் காகிவ் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் உக்ரைன் பாதுகாப்புப் படைகள் கடந்த தினம் வெற்றி பெற்றது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்ட சுமார் 10 சித்திரவதைக் முகாம்களில் உக்ரைன் இராணுவம் சோதனை நடத்தியது.
அந்த சித்திரவதை மையங்களில் பல வெளிநாட்டு பிரஜைகள் அடைக்கப்பட்டிருந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
Be First to Comment