இன்று மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
மாதகலை சேர்ந்த சித்தியும் (வயது 39) பெறா மகளும் (வயது 20) அராலியில் உள்ள உறவினர்களது வீட்டிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
இதன்போது காரைநகரில் இருந்து யாழ்ப்பாண பக்கமாக சென்று பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் வட்டுக்கோட்டை சந்தியடியில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமாகியுள்ளது. இருப்பினும் தெய்வாதீனமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பெண்களுக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவத்தில் விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment