பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, மசகு எண்ணெய் தாங்கிய கப்பல், நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்தும் நங்கூரமிடப்பட்டுள்ளதாக, கனிய வள பொது சேவையாளர் சங்க தலைவர் அசோக்க ரன்வல குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிபொருள் கப்பல்களுக்கு, தாமதக் கட்டணம் அதிகளவில் செலுத்தப்படுவதன் ஊடாக, நாட்டின் டொலர் கையிருப்பு விரயம் செய்யப்படுகின்றது.
கடந்த 23 ஆம் திகதி முதல், மசகு எண்ணெய் கப்பல், இவ்வாறு இலங்கை கடற் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
அதற்கு, பெருமளவான தாமதக் கொடுப்பனவை செலுத்த நேரிட்டுள்ளது.
இவ்வாறு கடந்த காலத்திலும் நிகழ்ந்துள்ளது.
முறையான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படாமை காரணமாக, இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
என கனிய வள பொது சேவையாளர் சங்க தலைவர் அசோக்க ரன்வல குறிப்பிட்டுள்ளார்
மசகு எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்துவதில் தாமதம்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment