அக்குரஸ்ஸ இம்புல்கொட பிரதேசத்தில் கோடாரி தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் தலையிட்டதன் காரணமாக நேற்றிரவு (17) இந்த மாமனாரை மருமகன் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Be First to Comment