கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்த மன்னார் பள்ளிமுனையில் செயற்பட்டு வந்த தனியார் நண்டுப் பண்ணையில், திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக சுமார் ஒரு வருடமாக செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த பண்ணையைப் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பண்ணையை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், குறித்த பிரதேச கடற்றொழிலாளர்களினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, கடலட்டைப் பண்ணைகளை தமக்கும் வழங்குமாறும், படகு ஒன்றில் தொழிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், படகுகளை கட்டுவதற்கான வாடிகளுக்கான கோரிக்கை போன்ற தொழில்சார் எதிர்பார்ப்புக்கள் முன்வைக்கப்பட்டன.
அவைதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், சாத்தியமான விடயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Be First to Comment