மோட்டார் சைக்கிளில் பயணித்து பெண்களின் தங்க நகைகளை அபகரித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பானமுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த காண்ஸ்டபிள் இந்த சம்பவங்களிற்காக பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர் இரத்தினபுரி கல்தொட்ட பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என்பதோடு, கேரகலை பொலிஸ் காவலரணிலும் பணியாற்றி வருபவர் என்பது தெரியவதுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment