Press "Enter" to skip to content

யாழில் சிறுமிகள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

யாழில் சிறுமிகள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!

JaffnaSri LankaChild Abuse
 By Yadu 22 நிமிடங்கள் முன்
0SHARES
Follow us on Google News

யாழ் பண்ணைப் பாலத்தின் கீழ்ப் பகுதி மற்றும் கோட்டைக்கு வெளியேயுள்ள பகுதி என்பவற்றில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதாக யாழ். மாவட்டச் செயலகக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முனியப்பர் ஆலயத்திற்கு பின்பாகவும் கோட்டைக்கு வெளியேயும் உள்ள பகுதியிலேயே பாடசாலைச் சிறுமிகள் பலர் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர் .

காதலர்கள் என்ற போர்வையில் அங்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர் .

யாழில்   சிறுமிகள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்! | Girls Are Continuously Abused In Jaffna

கடந்த சில மாதங்களாக இந்தச் சம்பவங்கள் அங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

அதேபோன்று பண்ணைப் பாலத்தின் கீழ்ப் பகுதியிலும் இதேபோன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் உன்னிப்பாக கவனிக்கவேண்டும் என்றும் , பொலிஸார் இந்தப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் மாவட்டச் செயலகக் கூட்டத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *