51வது படைப்பிரிவு இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட சிநேகிதபூர்வமான கிரிக்கெட் போட்டி இன்றையதினம், 51வது இராணுவ படையணி முகாமில் நடைபெற்றது.
கோப்பாய் சென் ஜோசப் அணியினர், உரும்பிராய் கிரிக்கற் அணியினர் மற்றும் 51வது படையணி இராணுவத்தினர் ஆகியோருக்கு இடையே இந்த போட்டியானது வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் உரும்பிராய் கிரிக்கெட் அணியினர் முதலாவது இடத்தினையும், 51வது படையணி இராணுவ அணி இரண்டாவது இடத்தினையும், கோப்பாய் சென் ஜோசப் அணி மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
Be First to Comment