Press "Enter" to skip to content

இலங்கையில் இருந்து தொடர்ந்தும் இந்தியா செல்லும் ஏதிலிகள்!

இலங்கையில் இருந்து மேலும் 12 ஏதிலிகள்,இன்று தமிழகத்தின் ராமேஸ்வரம் சென்றடைந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தனுஷ்கோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4வது தீவில் இருந்து இந்திய கடலோர காவல்படையினர் இந்த 12 பேரையும் மீட்டனர்.

இன்று செவ்வாய்கிழமை தமிழகத்துக்கு வந்தவர்களில் 3 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உள்ளனர் என்று இந்திய செய்திகள் கூறுகின்றன.

இந்த 12 பேரும் மூன்று வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை 4வது தீவில் இறக்கிவிடுவதற்காக மீன்பிடி படகுக்காக, தமது இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தை செலுத்தியதாக, தமிழகத்துக்கு சென்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டு பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து இதுவரை 170 பேர் தமிழகத்துக்கு சென்றுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *