யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் நண்பனின் ATM அட்டையை திருடி மதுபானம் கொள்வனவு செய்த நபரை 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பனின் ATM அட்டையை திருடி 30 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார்.
அது தொடர்பில் ATM அட்டையின் உரிமையாளரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து, நீதிமன்றில் இன்று (20) முற்படுத்திய போது வழக்கினை விசாரணை செய்த நீதவான் சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல குறித்த நபருக்கு அனுமதித்தார்.
Be First to Comment