நாளாந்த மின்வெட்டை இன்று (20) முதல் 20 நிமிடங்களால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த நாட்களில் நாளாந்த மின்வெட்டு ஒரு மணித்தியாலமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் (21) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது
Be First to Comment