Press "Enter" to skip to content

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இரு பகுதிகளில் போதைப் பயன்பாடு உச்சம்! கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு விருப்பமில்லையா?

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்த நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் எவரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லை.

நேற்றைய தினம் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தலைமையில் போதனா வைத்தியசாலையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில்

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் உள்ள செல்வபுரம் மற்றும் யோகபுரம் பகுதிகளில் போதை பொருள் பாவனை அதிகரித்து செல்வது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது கோபாய் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் வந்திருக்கிறீர்களா என வினாவப்பட்டபோது எவரும் பதிலளிக்காத நிலை காணப்பட்டது.

விடயம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் முயற்சி பயனளிக்கவில்லை

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *