Press "Enter" to skip to content

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை 2021ம் ஆண்டை விடவும் 2022ம் ஆண்டு 2 மடங்காக உயர்வு! யாழ்.போதனா வைத்தியசாலை கலந்துரையாடலில் அதிர்ச்சி தகவல்..

யாழ்.சிறைச்சாலையில் 2022ம் ஆண்டு புரட்டாசி மாதம் 20ம் திகதி நேற்றுவரை போதைப் பொருள் குற்றத்திற்காகவும், குற்றச்சாட்டின் அடிப்படையிலும் 854 பேர் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும் என யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனையை தடுத்தல் மற்றும் விழிப்புட்டல் என்ற தொனிப்பொருளிலான அவசர கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் கடந்த வருடம் கஞ்சா, ஹெரோயின், ஜஸ் போன்ற போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை, பாவனை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் குற்றங்களுக்காக 485 தடுத்துவைக்கப்பட்டனர்.

அதுவே 2022ம் ஆண்டில் 8 மாதங்கள் 20 நாட்களில்  சுமார் 854 பேர் நீதிமன்றத்தால் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு 10 பெண்கள்களும் 2022 இவ்வருடம் ஒன்றரை மாத குழந்தையுடன் 13 பெண்கள் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது 5 பெண்கள் கெரோயின் பாவித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தால் சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயம் மேற்படி கலந்துரையாடல் மூலமாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளமை தொடர்பில் மேற்படி கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் பல பாடசாலைகள் அதனை வெளிக்கொண்டு வரத் தயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி 

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து சென்றள்ளமை கவலை அளிப்பதாகவும் இனியும் தடுக்காவிட்டால் எதிர்கால சந்ததியினரை இழக்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்படும்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எமது சமூகத்தில் இருக்கின்ற நிலையில் இனியும் நாம் கௌரவம் பார்ப்போமானால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களால் ஏனையவர்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்படும்.

போதப்பொருள் பாவனையை தடுப்பதற்கும் போதைப்பொருளுக்கு அடிமையானவரை மீட்டெடுப்பது தொடர்பில் முறையான வேலை திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆகவே பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயல அதிகாரிகள்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் அனைவரும் இந்த விடயத்திற்கு முன் வரவேண்டும் என தெரிவித்துடன் அடுத்த கட்ட கலந்துரையாடலில் சாதகமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *