Press "Enter" to skip to content

கொழும்பில், புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று, புத்தகக் கண்காட்சியை, பார்வையிட்டார்.
கொழும்பில் இடம்பெற்று வரும் புத்தகக் கண்காட்சியை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று பார்வையிட்டுள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமான இந்த புத்தகக் கண்காட்சி, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன் போது, 75 ஆவது சுதந்திர தினத்தில், புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்யவுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட அரியவகை நூல்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், அந்த புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தின நிழ்வை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்படவுள்ள அந்த புத்தக கண்காட்சிக்கு, இலங்கை புத்தக பதிப்பாளர் சங்கத்தின் ஆதரவையும் எதிர்ப்பார்த்துள்ளோம். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *