Press "Enter" to skip to content

பாடசாலை மாணவர்களுக்கு உணவுப் பற்றாக்குறை: பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

பாடசாலை மாணவர்கள் சரியான உணவு கிடைக்காமல் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும், அவர்களுக்கு சத்துள்ள உணவுகளை வழங்க முடியாமல் அரசாங்கம் திணறுவதாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சுமத்தியதால் இன்று பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அநுராதபுரம் விளாச்சிய பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளில் சுமார் 20 பாடசாலை மாணவர்கள் பட்டினியின் காரணமாக பாடசாலை நேரத்தில் மயங்கி விழுந்ததாகவும் மினுவாங்கொடையில் உள்ள குழந்தையொன்று மதிய உணவிற்காக தேங்காய் உள்ளீடை கொண்டு வந்ததாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் KPS குமாரசிறி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகங்களும் சில அதிகாரிகளும் பல தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்கு தேவையற்ற விளம்பரங்களை வழங்கி பிரச்சினையை பொதுமைப்படுத்த முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

 

“ஒரு பிரச்சினை இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இந்த தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் பிரச்சினையை நாங்கள் பொதுமைப்படுத்த முடியாது. நான் மினுவாங்கொடையில் உள்ள பாடசாலையின் அதிபரை நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டேன், அவர் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என மறுத்தார். விளாச்சியாவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நான் பார்க்கிறேன்.எனவும் அவர் தெரிவித்தார்.

சில கந்து வட்டி அதிகாரிகள் நிலைமையை இட்டுக்கட்டி பெரிதாக்கி வருவதாவும், ஹம்பாந்தோட்டையில் உள்ள 80% பாடசாலை மாணவர்களிடையே போசாக்கு குறைபாடு காணப்படுவதாக ஹம்பாந்தோட்டை வைத்தியர் ஒருவர் கூறிய கூற்று அடிப்படையற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் உள்ள சிறார்களின் போசாக்கின்மை 5% வீதமே உள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக எனக்கு அறிவித்துள்ளனர்.

அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தாமல் நில நிலைமையை ஒப்புக்கொண்டு தீர்வுகளை காணுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

“இந்த பிரச்சினையின் தாக்கம் நீண்ட காலத்திற்கு உணரப்படும். புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை பதவியில் சேர்ப்பதற்கு பணம் செலவழிக்கும் முன் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும்,” என ஹர்ஷன ராஜகருணா இதன் போது தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டு இரண்டு வருடங்களாக சுமார் 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

“சில பாடசாலைகளில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் அரிசி வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக அரச பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க முடியவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *