புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு பணம் அனுப்பும் வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் கடந்த மாதம் 16.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது.
46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரிப்பு
ஜூலை மாதத்தில் 279 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அட்டவணைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் ஆகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
எனவே, வெளிநாட்டுப் பணம் அனுப்பிய பணம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளதாகவும், சட்ட வங்கி முறைகள் மூலம் பணம்அனுப்பப்பட்டதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது.
Be First to Comment