Press "Enter" to skip to content

மாணவியின் பகல் உணவாக இளம் தேங்காய்! பசியின் கோரம்!

இலங்கையின் மேல் மாகாண மினுவாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட இடைநிலைப் பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியொருவர் நேற்றைய தினம் மதிய உணவிற்காக இளம் தேங்காயை உட்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த மாணவி பாடசாலையில் மாணவத் தலைவியாகவும் செயற்படுகிறார்.

குறித்த மாணவியின் தந்தை பிரதேசத்தில் பணியாற்றும் ஒரு தொழிலாளி என்றும் அவரது தாயார் ஒரு இல்லத்தரசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த ஆசிரியர்கள் குறித்த மாணவிக்கு மதிய உணவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்தாம் வகுப்பு வரை மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சம்பவத்தன்று மாணவர்களுக்கு சோறு மற்றும் பருப்பு கறி தயாரிக்கப்பட்டிருந்தது.

எனினும் தரம் மூன்று மாணவர்கள் இரண்டாவது முறையாகவும் சோறு வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் மதிய உணவு தயாரிக்கும் பெண், சோறு மட்டுமே இருப்பதாகவும் கறி இல்லையென்றும் கூறினார்.

இந்தநிலையில் கறி எதுவும் இல்லாமல் குறித்த மாணவர்கள் சோறு மாத்திரம் உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *