வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாகவும், வெலிக்கடை சிறைச்சாலையின் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சோதனை செய்த போதும் நேற்று (21) வரை கைதி தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் குற்றத்திற்காக ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், இந்த கைதி ஒக்டோபர் 16 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.
அன்றைய தினம் அழைத்து வரப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இரவு 8.00 மணியளவில் சிறை அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் போது ஒரு கைதி காணாமல் போனதாகவும் இரவு முதல் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கைதிக்கு என்ன நடந்தது என அறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் உத்தரவின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ் இந்த கைதி காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Be First to Comment