ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை ஜப்பானுக்கு செல்லவுள்ளார்.
அதற்கு முன்னர் புதிய அமைச்சர்களை நியமிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போதும் , ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சென்று திரும்பிய பின்னரே அதனை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகிறது.
மணிலாவில் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள ரணில் ,அதற்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க விரும்பவில்லையென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை கூட்டுவது அந்த பேச்சுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துமென ஜனாதிபதி கருதுவதாக தெரிகிறது.
Be First to Comment