யாழ்ப்பாணம், வடமராட்சி – சக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினர் 42 கிலோ கிராம் கஞ்சா பொதி ஒன்றினை கைப்பற்றியுள்ளனர்.
இன்று அதிகாலை சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்த போதே, சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினர் கஞ்சா பொதியை கைப்பற்றியுள்ளனர்.
படையினர் வருவதை அவதானித்த கஞ்சா கடத்தல்காரர்கள் ஒரு பொதியை மட்டும் இறக்கிய நிலையில், படகு மற்றும் கஞ்சாவுடன் கடலுக்குள் தப்பிச்சென்றுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மதுவரித் திணைக்களத்தினூடாக நீதிமன்றில் பாரப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி – சக்கோட்டை பகுதியில் 42 கிலோ கஞ்சா மீட்பு
More from UncategorizedMore posts in Uncategorized »
- பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
- பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? யாழில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு..!
- மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
- சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்
- கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி!
Be First to Comment