வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில், இடம்பெற்ற இச்சந்திப்பில் கடற்றொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தினர்.
குறிப்பாக வி.எம்.எஸ் கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ள எல்.சி. டி உகரணத்தினால் தேவையற்ற அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும், மாற்றீடாக வானொலி தொடர்பு சாதன பொறிமுறையை உருவாக்கித் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், கடற்றொழிலாளர்களிதும் நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே வி.எம்.எஸ். கருவி பொருத்தும் செயற்றிட்டத்தினை அமைச்சு முன்னெடுத்து வருவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், அதனை பயன்படுத்துவதன் மூலம் கடற்றொழிலாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
வாழைச்சேனை பகுதியில் சுமார் 475 படகுகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment