களுத்துறை – புலத்சிங்கள கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்விபயிலும் ஏழு மாணவர்கள் ரொபி இனிப்பு வகையொன்றை சாப்பிட்ட நிலையில் அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பமிலா நிஷாந்தி தெரிவித்துள்ளார். மேலதிக வகுப்பொன்றில் பங்கேற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று கடையொன்றில் ஒரு வகையான இனிப்பு டொபியை வாங்கி உட்கொண்ட நிலையில், திடீரென நோய்வாய்ப்பட்டு 7 பேர் அகலவத்தை பிம்புர எல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 முதல் 12 வயதுடைய ஏழு சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் சிறுவர்களின் உடல் நிலைமை மோசமடையவில்லை எனவும் பிம்புர வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இனிப்பு ரொபியை உட்கொண்ட 07 மாணவர்கள் வைத்தியசாலையில்!
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment