கிளிநொச்சி புண்ணை நீராவிப் பகுதியில் தமது குழந்தைகளுக்கான போஷாக்கு உணவை வழங்குமாறு கோரி பெற்றோர் நேற்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் புன்னை நீராவிப் பகுதியில் இயங்கி வரும் திருச்சபை ஒன்றின் ஊடாக குறித்த பிரதேசத்திலுள்ள 334 சிறுவர்களுக்கான போஷாக்கு உணவு வழங்கப்பட்டு வருவதுடன் மாலை நேர கற்றல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் குறித்த திருச்சபையில் இடம்பெற்ற நிர்வாக சிக்கல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மாலை நேர கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன் சிறுவர்களுக்கான போஷாக்கு உணவு வழங்கல் செயற்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Be First to Comment