சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) டோக்கியோவில் உறுதியளித்துள்ளார்.
ஜப்பானின் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றுள்ள, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போது, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிங்கப்பூர் மீண்டும் இலங்கையில் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிங்கப்பூர் பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
Be First to Comment