Press "Enter" to skip to content

கனடாவில் இடம்பெற்ற கொடூர கத்திக்குத்து தாக்குதல் – தமிழர் ஒருவர் பலியானதாக தகவல்

கனடாவில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழந்த நபர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.

மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு டொராண்டோவில் கடந்த செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கனடாவில் இடம்பெற்ற கொடூர கத்திக்குத்து தாக்குதல் - தமிழர் ஒருவர் பலியானதாக தகவல் | North York Stabbing That Left One Dead

 

இந்த சம்பவம் தொடர்பில் 22 வயது இளைஞன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு 10:18 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திலேயே இறந்த நபர்

 

இதில் 24 வயதான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 25 வயதான நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ்கேஸில், ஒன்ட் நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞன். சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மரணம் இந்த வருடத்தில் டொராண்டோவில் நடந்த 49வது கொலையாகும். அவரது அடையாளத்தை பொலிஸார் வெளியிடவில்லை.

 

கனடாவில் இடம்பெற்ற கொடூர கத்திக்குத்து தாக்குதல் - தமிழர் ஒருவர் பலியானதாக தகவல் | North York Stabbing That Left One Dead

இந்த சம்பவம் தொடர்பில் டொராண்டோவைச் சேர்ந்த 22 வயதான ஹாரூன் இம்ரான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலை மற்றும் மோசமான தாக்குதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *