Press "Enter" to skip to content

கழுத்துப் பட்டியால் கைகளை கட்டி 12 வயது சிறுமியை கடத்த முயற்சி! கடத்தல்காரனை துரத்தி சிறுமியை மீட்ட பெண்..

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை துாக்கிச் செல்ல முயற்சித்த முகமூடி அணிந்த நபரிடமிருந்து பெண் ஒருவர் சிறுமியை காப்பாற்றியிருக்கின்றார்.

குறித்த சம்பவம் இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக இரத்தினபுரி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இச் சிறுமி நேற்று பாடசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, புதரில் மறைந்திருந்த முகமூடி அணிந்த நபரொருவர்,

சிறுமி அணிந்திருந்த கழுத்துப் பட்டியால் கைகளை பின்னால் கட்டி சிறுமியை கடத்த முற்பட்டுள்ளார்.

அருகில் உள்ள தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஒருவர் தெய்வாதீனமாக அதனை கண்டு ஓடிச்சென்று சிறுமியைக் காப்பாற்றியுள்ளார்.

இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *