தொல்புரம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த இருவர் வீட்டின் பிரதான வாயில் கதவுகளை சேதப்படுததியதுடன், வீட்டில் தனித்திருந்த பெண்ணை தாக்கிவிட்டு சி.சி.ரீ.வி கமராக்களை சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்திருந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், காயமடைந்த 35 வயதான குடும்ப பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது வீட்டிலிருந்த நகைகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறியுள்ளனர். எனினும் இது குடும்பத்திலுள்ளவர்களுக்கிடையிலான மோதலினால் இடம்பெற்றது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Be First to Comment