Press "Enter" to skip to content

ஏதிலிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் இருவர் கைது

இலங்கையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் ஆகிய பிரிவுகளில் இவர்கள் தேடப்பட்டு வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22-ம் திகதி முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து தனுஸ்கோடி வழியாக தமிழகத்திற்கு பலர் ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

இந்தநிலையில், ஆகஸ்ட் 21ஆம் திகதியன்று தமிழகத்துக்கு சென்றவர்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் இலங்கையில் குற்றங்களுக்காக தேடப்பட்டு வருபவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *