முல்லைத்தீவு குருந்தூர் அல்லது குருந்தி மலை விகாரை பௌத்த விகாரையாக இருந்ததற்கான கடந்த கால ஆதாரங்கள் இருந்தபோதிலும், பின்னர் அது தமிழர்கள் வழிபட்ட ஆதிசிவம் ஆலயமாகவே இருந்ததாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மானதுங்க தெரிவித்தார்.
தொல்பொருள் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி இந்த இடத்தின் உரிமையை உறுதி செய்யுமாறு சிலர் தனக்கு சவால் விடுத்தாலும், பௌத்தர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் தான் பௌத்த ஆணையாளர் இல்லை என்றும் தொல்பொருள் ஆணையாளர் என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.
அதேசமயம் தனது உரிமைகளை நிலைநாட்டுவதை விட மத, இன சகவாழ்வு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்
Be First to Comment