தெற்கு சிங்கள மக்களும் வடக்கு தமிழ் மக்களும் மீள் இணைய கூடாது என்பது தான் தமிழ் அரசியல்வாதிகளின் எண்ணம் என யாழ்.சிவில் சமூக செயற்பாட்டாளர் அருண் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் பல சிங்கள பகுதிகளில் தமிழ் மக்களுடைய ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்களை கட்டுவதற்கு எந்த சிங்கள மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக சரித்திரமே இல்லை.
ஆனால் தமிழர் பகுதியில் பௌத்த சின்னங்களை உருவாகும் போது தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பது தவறான விடயமாகும்.
அரசியல்வாதிகளின் மோசமான செயல்
குருந்தூர் மலையில் விகாரை ஒன்றை அமைப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன நட்டம் ஏற்பட போகின்றது. ஒரு நட்டமும் இல்லை.
கோவிலும் விகாரையும் அருகில் இருப்பதனால் தமிழர் மற்றும் சிங்களவர் இணைந்து செயற்படவும் ஒற்றுமையாக வாழ்வதற்கும் இது நல்ல வாய்ப்பாக அமையும்.
தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறான நன்மை இடம்பெற கூடாது என தமது அரசியல் நலன் கருதி செயற்படுகின்றனர்.”என கூறியுள்ளார்.
Be First to Comment