Press "Enter" to skip to content

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்காக புதிதாக அமைக்கப்பட்ட குறித்த புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டிடத் தொகுதியை சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தார்.

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதியின் திறப்பு விழா நிகழ்வுகள் இன்று காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெற்து.

இந்நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர்.உதயகுமார், யாழ்ப்பாண வலயக் கல்வி பணிப்பாளர் .இராதாகிருஷ்ணன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *