இலங்கை கிரிக்கட் சபையின் பல கோடி நிதியில் அமைக்கப்படும் சர்வதேச கிரிக்கட் மைதானம் வவுனியா ஈரப்பெரியகுளத்தில் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள விவசாய பண்ணைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத பகுதியை மைதானத்திற்கு வழங்குமாறு வவுனியா துடுப்பாட்ட சங்கம் வலியுறுத்திய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கும் எழுத்து மூலம் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இது தொடர்பில் அவர்களும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரப்பெரியகுளத்தில் பிரதேச செயலகத்தில் காணி ஒதுக்கப்பட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இதைவேளை ஓமந்தையில் காணி ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்ட போதிலும் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையும் காணப்பட்ட மயும் குறிப்பிடத்தக்கது.
Be First to Comment