Press "Enter" to skip to content

ரிக்ரொக்” சமூக வலைத்தளத்திற்கு அடிமையானதுடன், அதன்மூலம் காதல்வயப்பட்ட 10 சிறுமிகள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் உளவள சிகிச்சை, அதிர்ச்சி தகவல்..

ரிக்ரொக்” சமுக வலைத்தளத்திற்கு அடிமையாகி அதன் மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகளுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் உளவள சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அதீத அலைபேசிப் பாவனையின் காரணமாக, இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 16 சிறுவர்கள் யாழ்.போதனா மருத்துவமனையில் உளவள சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களில் 10 பேர் சிறுமிகள். இவர்கள் “ரிக்ரொக்” சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி  காலப்போக்கில் அதற்கு அடிமையாகி, பின் அதன்மூலம் காதல் வயப்பட்டு உளநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக் காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதர சிறுவர்கள், நாளின் கணிசமான பகுதியை தொலைபேசிக்குள் தொலைத் துக்கொண்டவர்கள். தொலைபேசி பயன்பாட்டில் இருந்து மீளமுடியாத நிலையில் அவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதீத தொலைபேசிப்பாவனைதொடர்பில் மருத்துவர்கள் தெரிவித்ததாவது,  யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்ற அதேநேரம் தொலைபேசிப் பாவனையும் அதன் ஆபத்துக்களும் மறுபுறம் கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களை யும் சிறுவர்களையும் விழுங்கி வருகின்றது.

தொலைபேசிப்பாவனைக்கு அடிமையாக இந்த வருடம் மட்டும் 16 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அத்துடன் இந் தப் பிரச்சினைக்குத் தாமாக முன்வந்து சிகிச்சைபெறுபவர்கள் மிகமிகக்குறைவு.

எனவே தொலைபேசிப் பாவனையால் தம் உளநலத்தைத் தொலைத்த மாணவர்கள் சமூகத்தில் இன்னும் பல மடங்கு இருக்கலாம். பெற்றோர் தமது பிள்ளை களின் தொலைபேசிப் பாவனை தொடர் பில் உச்சபட்சக் கவனத்துடன் இருக்க வேண்டும்  என்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *