
மனித உரிமை செயற்பாட்டாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமான கலாநிதி ராஜனி திராணகமவின் 33வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியம் மற்றும் ராஜனி திராணகம ஞாபகார்த்தக் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் குறித்த ஞாபகார்த்த நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சமூக நீதிக்கான வெகுஜன இயக்கத்தின் செயற்பாட்டாளர் சபா.தனுஜன், சமூக செயற்பாட்டாளர் மற்றும் கலைஞரான பீற்றர். டீ.அல்மெய்டா ஆகியோர் சமகால நெருக்கடி நிலை தொடர்பில் உரையாற்றினர்.இதன்போது மதத்தலைவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரசியல் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ராஜனி திரணகம, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல்துறையின் தலைவராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்க கிளையின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் செயல்பட்டார்.
முறிந்த பனை என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை இவர் வேறு சிலருடன் இணைந்து எழுதியுள்ளார். முறிந்த பனை புத்தகம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு 1989 செப்டெம்பர் 21ம் திகதி அன்று, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில், வேலை முடிந்து சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது, துப்பாக்கிதாரி ஒருவரால் அவரது வீட்டின் முன் சுட்டுக் கொல்லப்பட்டார்





Be First to Comment